பாரத் ஜோடோ யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்!

இந்தூர் (19 நவ 2022): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அடையாளம் தெரியாத நபர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து மத்திய மற்றும் மாநில போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தின் ஆதாரம் குறித்து மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி மத்தியப் பிரதேசம் வந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபரிடமிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தது.

ஒரு இனிப்பு கடையில் தபால் மூலம் கிடைத்த மிரட்டல் கடிதத்தை கடை உரிமையாளர் உடனடியாக போலீசில் ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து குறிப்பிடப்பட்டதாகவும், அவரது தந்தை ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட கதி தான் ராகுலுக்கும் காத்திருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ராகுலின் பாதுகாப்பை மனதில் கொண்டு, இந்தூர் காவல்துறையும், குற்றப்பிரிவும் கடிதத்தின் மூலத்தைக் கண்டறிய முயன்று வருகின்றனர். ஜூனி இந்தூர் காவல் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் கவனமாக ஆய்வு செய்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹாட் நியூஸ்:

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...

சவூதியில் மீண்டும் கனமழை எச்சரிக்கை!

ரியாத் (21 ஜன 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வியாழன் வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மக்கா மாகாணத்தில் பல இடங்களில் இடி...

சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு...