டெல்லியில் ஊரடங்கிற்கு நீதிபதிகள் பரிந்துரை!

721

புதுடெல்லி (13 நவ 2021): டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.  அப்போது,டெல்லி – என்.சி.ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். காற்று மாசுபாடு என்பது மிக மிக முக்கியமான பிரச்சினை.

இதைப் படிச்சீங்களா?:  பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!

காற்று தரக் குறியீட்டை 500ல் இருந்து குறைந்தபட்சம் 200 வரை குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? வேண்டுமெனில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம். அதுமாதிரி திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா? அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் நிலைமை கட்டுக்குள் வர வேண்டும். அதற்கேற்ப அவசர நடவடிக்கைகளை முடுக்கி விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் பொதுமக்கள் வீட்டிற்கு உள்ளேயும் முகக்கவசம் அணிந்து கொண்டே இருங்கள் என்று வலியுறுத்தினார்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.