தில்லி கலவரம், பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களே காரணம்! தில்லி உண்மையறியும் குழு அறிக்கை!

Delhi_Riots
Share this News:

தில்லி (19 ஜூலை,2020):கடந்த பிப்ரவரி மாதம் தில்லி-யின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் கலவரங்கள் குறித்து தில்லி மைனாரிட்டி கமிஷன் அமைத்த உண்மை அறியும் குழு, அந்தக் கலவரத்துக்கான முழுமூல காரணங்களாக பா.ஜ.க. தலைவர்களின் வன்மப் பேச்சுக்களை ஆதாரங்களுடன் முன்னிறுத்தியிருக்கின்றது.

Amit Shah
Amit Shah

மத்திய பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட CAA_NRC_NPR உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை, அமைதியான முறையில் எதிர்க்கும் வகையில் தில்லி-யில் ஷாஹீன் பாக் அறப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், பா.ஜ.க. தலைவர்களோ, அதற்கு எதிர்ப்பு என்கின்ற பெயரில் துவேஷப் பேச்சுக்களையே முன்வைத்துக் கொண்டிருந்தனர். பா.ஜ.க.-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா-கூட ‘தில்லி தேர்தலில் வாக்களிக்கப் போகும் மக்கள் வாக்கு எந்திரத்தில் பொத்தானை அமுக்கினால் அது ஷாஹீன் பாக் மக்களுக்கு பெரும் ‘ஷாக்’ தர வேண்டும்’ போன்ற துவேஷப் பேச்சுக்களை பேசியதையும் உண்மை அறியும் குழு சுட்டிக் காட்டியிருக்கின்றது.
இது தவிர, பா.ஜ.க.-வின் முக்கியப் புள்ளியாக தில்லி-யில் வலம் வரும் கபில் மிஷ்ரா வெளிப்படையாகவே வன்முறை தூண்டும் வகையில் பேசி வந்திருக்கிறார்.
வடகிழக்கு தில்லியில் துவங்கிய கவலவரத்துக்கு மேலும் தூபம் போடும் வகையில் பா.ஜ.க. தலைவர்களுடைய வன்மத்துடனான துவேசப் பேச்சுகள் வெளிப்படையாகவே மக்களை வன்முறைக்குத் தூண்டியதாக அக்குழு குற்றஞ்சாட்டுகிறது. மேலும், CAA_NRC_NPR-க்கு எதிராகப் போராடும் மக்கள் மீது ஆதாரமற்ற சந்தேகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களுக்கு எதிராக இன்னொரு தரப்பை வன்முறையில் இறங்கும் வகையில் தூண்டியிருக்கின்றது. இத்தகைய செயல்பாடுகள், CAA_NRC_NPR எதிர்ப்பாளர்களாக இருக்கின்ற ஷாஹீன் பாக் மக்களுக்கு எதிரான மனப்பான்மையை எதிர்த் தரப்பினரிடையே தூண்டச் செய்தது. அதுவும், இந்தத் தலைவர்களில் எவருமே, ஷாஹீன் பாக் அறப்போராட்ட மக்களை சந்திக்க செல்லவே இல்லை என்பதையும் உண்மையறியும் குழு தனது வாதத்துக்கு வலு சேர்க்க சுட்டிக் காட்டுகிறது.

Kapil Mishra
Kapil Mishra

இறுதியாக கபில் மிஷ்ரா-வின் வன்மமான மிரட்டல் தொனியில் அமைந்த துவேஷப் பேச்சுக்களை கலவரத்துக்கான முக்கிய தூண்டுகோலாக சுட்டிக்காட்டியிருக்கிறது உண்மை அறியும் குழு:-
‘ட்ரம்ப் இந்தியா-வை விட்டு செல்லும் வரை அமைதி காப்போம். அவர் சென்றவுடன் தில்லியின் ஜாஃப்ராபாத், சான்பாக் பகுதிகளை சீர் செய்து மக்களை கலைத்திட வேண்டும். இல்லையென்றால் மூன்று நாள்தான் கெடு பின்னர் நாங்கள், சாலையில் இறங்குவோம்!’
இத்தகைய வன்மையாளர்களை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என நாட்டு மக்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஜெய் ஹிந்த்!

இளவேனில்


Share this News:

Leave a Reply