கர்நாடகாவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்க இந்து அமைப்புகள் கோரிக்கை!

448

பெங்களூரு (04 ஏப் 2022): மசூதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகாவில் இந்து அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளன.

இது தொடர்பாக கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனை வலியுறுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, ஒலிபெருக்கி பயன்படுத்துபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீராம சேனையின் மாநிலத் தலைவர் சித்தலிங்க சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

ஏற்கனவே மசூதிகளில் ஒலி எழுப்பும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.