கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் மாமா சுட்டுக் கொலை!

557

லக்னோ (25 பிப் 2020): கோராக்பூர் டாக்டர் கஃபீல்கானின் தாய்வழி மாமா சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேசம் கோராக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த நேரத்தில் தன் சொந்த செலவைல் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளை காப்பாற்றி புகழ் பெற்றவர் டாக்டர் கஃபீல் கான்.

ஆனால் அவர் மேலேயே பழி போட்டு சிறையில் தள்ளியது அரசு. அதேவேளை அவர் மீதான குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது ஏதாவது காரணம் எதிர் பார்த்து காத்திருந்த அரசு, இந்த வேளையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதை சாதகமாக்கிக் கொண்டு டாக்டர் கஃபீல் கான் மீது வழக்கு பதிவு செய்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!

இந்நிலையில் கஃபீல் கானின் தாய்வழி மாமாவும், ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான டாக்டர் நுஸ்ரத்துல்லாஹ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வழக்கறிஞர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுள்ளனர்.

இந்த கொலையின் பின்னணியில் சொத்து தகராறு காரணமாகத்தான் இந்த கொலை நடந்திருக்கக் கூடும் என போலீஸ் சந்தேகிக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டாக்டர் கஃபீல்கானின் சகோதரர் ஜமீலும் மர்ம நபர்களால் சுடப்பட்டார். எனினும் அதிர்ஷ்ட வசமாக அவர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.