நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்பட்டேன்: சிறை அனுபவங்கள் குறித்து டாக்டர் கஃபீல்கான்!

Share this News:

பெங்களூரு (06 டிச 2022): கோராக்பூர் சம்பவத்திற்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர் கஃபீல்கான், தனது சிறை அனுபவங்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெங்களூரில் நடந்த எழுத்தறிவு விழா நிகழ்வின் போது, “கோரக்பூர் மருத்துவமனை சோகம்” என்ற புத்தகத்தைப் பற்றி பேசினார். அப்போது, “சிறையில் என்னை நிர்வாணமாக்கி, பெல்ட் மற்றும் லத்தி தடி போன்றவற்றால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டேன்.

மூன்று முதல் நான்கு நாட்கள் காவலில் இருந்தும், போலீசார் உணவு வழங்கவில்லை. வெளியில் சிக்கன், இட்லி தோசை, கேக் என்று சாப்பிடுவார்கள். ஆனால் எனக்கு எந்த உணவும் வழங்கவில்லை. அவர்கள் கழிப்பறையை உபயோகித்தப் பிறகு அதனை நான்தான் சுத்தம் செய்யவேண்டும்.

என் இருப்பிடத்தில் ஒரு இந்து மருத்துவர் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? என் பெயரும், என் மதமும் அவர்கள் என்னை சித்ரவதை செய்ய போதுமானதாக இருந்துள்ளது” என்றார்,

மேலும் ஊடகங்களை சாடிய கஃபீல்கான், முக்கிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கஃபீல் கான் யார் என்பதைப் பற்றி நினைக்கவில்லை, மேலும் அவர்கள் கோரக்பூருக்குச் சென்று உண்மைத் தகவலைச் சேகரிக்கவில்லை சமூக ஊடகங்களில் வந்த தகவல்களின் அடிப்படையில் செய்திகள் அளித்தனர்” என்றார்,

கடந்த 2017 ஆம் ஆண்டு கோரக்பூர் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் இறந்தன. டாக்டர் கஃபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் வாங்கி பல குழந்தைகளைக் காப்பாற்றினார். எனினும் உத்திர பிரதேச அரசு கஃபீல்கான் மீது குற்றம் சாட்டி அவரை சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply