குழந்தைகள் உயிரிழப்புக்கு அரசே காரணம் – நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிருப்பிப்பேன்: டாக்டர் கஃபீல்கான்!

Share this News:

புதுடெல்லி (11 நவ 2021): உத்திர பிரதேசத்தில் கடந்த 2017ல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் மரணிக்க அரசே காரணம் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் இயங்கும் மக்கள் விரோத அரசான யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் பிஆர்டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசின் கையாலாகதத் தனத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போதும், டாக்டர் கஃபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் வரவழைக்கப்பட்டு பல குழந்தைகளை காப்பாற்றினார்.

ஆனால் உபி அரசு இதுகுறித்த விசாரணையில் டாக்டர் கஃபீல் கான் மீது பழி சுமத்தி அவரை பணியில் இருந்து தாற்காலிகமாக நீக்கியது. மேலும் அவர் சிறையிலடைக்கப்பட்டு பல அடக்குமுறைகளை சந்தித்தார். தற்போது குற்றமற்றவர் என விடுதலையாகியுள்ளார் டாக்டர் கஃபீல்கான்.

எனினும் அரசுப் பணியிலிருந்து உபி அரசு டாக்டர் கஃபீல்கானை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டி விரைவில் குழந்தைகள் மரணத்திற்கு உபி அரசே காரணம் என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என்று டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் சப்ளையர்களுக்கு அரசு பணம் கொடுக்காததே ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு காரணம். ஆக்சிஜன் சப்ளையர்களுக்கு 68 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அரசு அதனை செலுத்தவில்லை இதுவே ஆக்சிஜன் பற்றாகுறைக்கு காரணம் என டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார்.

மேலும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து குற்றமற்றவன் என விடுதலையாகியும் அரசு என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது என்று டாக்டர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த 63 குழந்தைகளின் பெற்றோர்கள் நீதி கேட்டு போராடுவதாக கூறியுள்ள கஃபீல் கான், அரசாங்கத்தின் நடவடிக்கை நியாயமானதா அல்லது நியாயமற்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை தான் நம்புவதாகவும், நான்கு மாதங்களில் உண்மை நிரூபிக்கப்படும் என்றும் கஃபீல் கான் கூறினார்.


Share this News:

Leave a Reply