மிசோரத்தில் திடீர் நிலநடுக்கம்!

320

புதுடெல்லி(12 ஜூலை 2020): மிசோரம் மாநிலத்தில் மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன.

மிசோரம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாம்பாய் மாவட்டத்தில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

நண்பகல் 2.28 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதைப் படிச்சீங்களா?:  ஹிஜாபை அனுமதிக்கும் வகையில் 10 கல்லூரிகள் நிறுவ கர்நாடக வக்பு வாரியம் முடிவு!

கடந்த சில நாட்களாக அருணாச்சலபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-சாகுல் ஹமீத்