காசு இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை – தனியார் மருத்துவமனையின் அத்துமீறல்!

போபால் (08 ஜூன் 2020): கையில் பணம் குறைவாக இருந்ததால் சிகிச்சைக்கு வந்த முதியவர் ஒருவரை மருத்துவமனை நிர்வாகம் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஷாஜாபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு 80 வயதான லக்ஷ்மி நாராயண், வயிற்று வலி காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார்.

சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் அவரது குடும்பம் பணம் செலுத்தியது ஆனால் டிஸ்சார்ஜ் ஆகும் போது மருத்துவமனை சார்பில் ரூ.11,270 கூடுதலாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முதியவரின் குடும்பம் அந்த பணத்தை செலுத்தவில்லை.

இத்னால் மருத்துவமனை ஊழியர்கள் முதியவர் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக சிகிச்சை அளித்த படுக்கையிலேயே கைகால்களை கட்டி போட்டனர். இது குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.

இதைதொடர்ந்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.