கும்பமேளாவில் பொய்யாக நடந்த கொரோனா பரிசோதனை!

Share this News:

புதுடெல்லி (13 ஜூன் 2021): உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஹரித்வார், டேராடூன், டெஹ்ரி, பவுரி ஆகிய மாவட்டங்களில் கும்பமேளா நடத்தப்பட்டது. வடஇந்தியாவில் பல லட்சம் பேர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக நாடு முழுக்க கொரோனா பரவியதாக புகார் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் உத்தரகாண்டில் கும்பமேளாவின் போது பொய்யான கொரோனா ரிப்போர்ட்கள் சமர்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக பஞ்சாப்பை சேர்ந்த கும்பளேவில் கலந்து கொள்ளாத நபருக்கு உத்தரகாண்டில் டெஸ்டா என்று சந்தேகம் கொண்ட ஐசிஎம்ஆர் விசாரணை நடத்தி உள்ளது. இந்த விசாரணையில் உத்தரகாண்டில் இருக்கும் தனியார் டெஸ்ட் நிறுவனம், பஞ்சாப் நபரை டெஸ்ட் எடுக்காமலே டெஸ்ட் எடுத்துவிட்டதாக கூறி உள்ளது. அதோடு இவரை கும்ப மேளாவிற்கு சென்றவர் என்றும் டெஸ்டிங்கில் குறிப்பிட்டுள்ளது.

கும்ப மேளாவிற்கு சென்றவர்களை டெஸ்ட் எடுப்பதற்காக உத்தரகாண்ட் சுகாதாரத்துறை இந்த நிறுவனத்தை ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனம்தான் கும்பமேளா கொரோனா டெஸ்ட் என்று பஞ்சாப் நபரின் பொய்யான ரிப்போர்ட்டை சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து அந்த டெஸ்ட் நிறுவனத்தில் சோதனை செய்ததில் இதேபோல் பல பொய்யான கொரோனா சோதனைகளை அந்த நிறுவனம் நடத்தி, பொய்யான ரிப்போர்ட்களை சமர்ப்பணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரிக்கும்படி ஹரித்வார் மாவட்ட மேஜிஸ்டிரேட் உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply