பாஜக எம்.எல்.ஏ கன்னத்தில் விவசாய சங்கத் தலைவர் விட்ட பளார் – வீடியோ!

287

உன்னாவ் (07 ஜன 2022): உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜக எம்.எல்.ஏ. பங்கஜ் குப்தா கன்னத்தில் விவசாய சங்கத் தலைவர் ஒருவர் பொது இடத்தில் சரமாரியாக அறைந்தார்.

இந்த திடீர் ஆத்திரமூட்டலுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. எம்.எல்.ஏ.வை கன்னத்தில் அறைந்தவரின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. எம்.எல்.ஏ. தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. பஞ்சாபில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தின் காரணமாக பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்தான பரபரப்பு அடங்குவதற்குள் உ.பி.யில், எம்.எல்.ஏ.வை விவசாயி ஒருவர் அறைந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.