மத்திய அரசு தொடர்ந்து பிடிவாதம் – மேலும் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

Share this News:

புதுடெல்லி (16 டிச 2020): விவசாய சட்டங்களுக்கு எதிராக நடந்துவரும் விவசாயிகளின் போராட்டம், மேலும் தீவிரமடைந்து வருகிறது. போராட்டம் துவங்கி, இன்றோடு 21 நாட்களாகின்றன.

டெல்லி-நொய்டா எல்லையில் உள்ள விவசாயிகள், இன்று அப்பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பெண்கள் உட்பட உழவர் குழுக்கள் ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து தொடர்ந்து வருகின்றனர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

அதே சமயம், “இந்தச் சட்டம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும், உண்மையான விவசாயிகள் அமைப்புகளுடன் விவாதிக்கப்படும்” என்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

இதற்கிடையே டெல்லி-ஆக்ரா மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடங்களில் முற்றுகை தொடர்கிறது.

தங்கள் கோரிக்கையில் சற்றும் மனம் தளராமல், மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டால் மட்டுமே போராட்டம் முடிவடையும் என்று விவசாயிகள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.


Share this News:

Leave a Reply