இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர்!

Share this News:

திருவனந்தபுரம் (14 மார்ச் 2021): கேரளாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் தேர்தலில் போட்டியிடப் பெண் வேட்பாளர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

. 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் காங்கிரஸ் 92 இடங்களில் போடுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் முதல்கட்டமாக 25 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை இந்தியன் யூனியன் மூஸ்லீம் லீக் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதில் முக்கிய சிறப்பம்சமாக நூர்பினா ரஷீத் என்ற பெண்ணிற்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கோழிக்கோடு தெற்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் பெண் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.


Share this News:

Leave a Reply