ஹிஜாப் அணிந்து கல்லூரி சென்ற மாணவி மீது ஏபிவிபி உறுப்பினர்கள் துன்புறுத்தல்!

Share this News:

மங்களூரு (05 மார்ச் 2022): கர்நாடகா மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி ஹிஜாப் அணிந்ததற்காக அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார்.

பி. சதீஷா பாய் அரசு முதல் தர கல்லூரி மாணவி ஹிபா ஷேக், அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் தன்னை துன்புறுத்தியதாக பந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“நான்  கல்லூரியில் தேர்வு எழுத செல்லும் போது ஏபிவிபியினர் என்னை துன்புறுத்தினர். பின்னர் புகார் அளிக்க பந்தர் காவல் நிலையம் சென்றேன். கமிஷனரே வந்து என் குறைகளைக் கேட்டார். அவர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்” என்று பதிவு செய்துள்ளார்.  அப்பதிவில்  மங்களூரு நகர காவல்துறையை டேக் செய்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தேர்வு எழுத வரும் முஸ்லிம் மாணவிகள் ஊசி எதுவும் பயன்படுத்தாமல், தலையை மறைக்கும் வகையில் சால்வை மாத்திரம் அணிந்து, பரீட்சை எழுத மாணவிகளுக்கு  கல்லூரி முதல்வர் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply