காஷ்மீர் கனமழையால் 5 பேர் பலி பலரை காணவில்லை!

198

ஜம்மு (28 ஜூலை 2021): காஷ்மீரில் பெய்து வரும் பெருமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர், 40 க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் ஹொன்சார் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு, மழை கொட்டி தீர்த்தது. இதில், அம்மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்; 40க்கும் அதிமானோர் மாயமாகியுள்ளனர். மேலும், 8 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதைப் படிச்சீங்களா?:  முஸ்லிம் மத அறிஞர் கைது - மதசார்பற்ற கட்சிகள் மவுனம்!

இதனையடுத்து, ஹொன்சார் மாவட்டத்திற்கு மீட்புப்படை விரைந்து, மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.