கொரோனா ருத்ரதாண்டவத்திலும் உல்லாச சுற்றுலா – வெளிநாட்டு பயணிகளுக்கு அரசு அனுமதி (வீடியோ)

Share this News:

புதுடெல்லி (03 மார்ச் 2020): கொரோனா ருத்ரதாண்டவத்திலும் உல்லாச சுற்றுலாவுக்கு வெளிநாட்டு பயணிகளை அரசு அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரண்டு சொகுசு பேருந்துகளில் சென்றுள்ளனர். இதனை ஸ்வராஜ் எக்ஸ்பிரஸ் என்ற தொலைக்காட்சி சேனல் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது.

அந்த சேனலின் செய்தியாளர் சுற்றுலா பயணிகளிடமும், சுற்றுலா வழிகாட்டியிடமும் “இந்த நெருக்கடியான சூழலில் எப்படி வெளியே வந்தீர்கள்? எப்படி சுற்றுலா செல்ல முடிந்தது?” என்று கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால் விமான நிலையம் செல்வதாகவும் அதற்கு வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் பதில் வந்தது. விமான நிலையங்கள் மூடப் பட்டுள்ள நிலையில் அந்த சுற்றுலா பயணிகள் எப்படி விமான நிலையம் செல்ல முடியும்? என்ற கேள்வியும் எழுகிறது.

டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத்தினர் கூட்டம் சேர்த்தது குறித்தும், அவர்கள் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையே உள்ள இடைவெளியை சரிவர பின்பற்றவில்லை என்றும் அரசும், ஊடகங்களும் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அரசு எப்படி இரு பேருந்துகளில் பயணிக்க அனுமதி அளித்தது? என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா வெளிநாட்டு பயணிகளிடமிருந்தே இந்தியாவிற்கு பரவியது என்ற கருத்து நிலவும் நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தனிமைப் படுத்தாமல் அவர்களை வெளியே செல்ல இந்திய வெளியுரவுத்துறை அனுமதி அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply