ஹிஜாப் முஸ்லீம் பெண்களின் முக்கிய கடமை – முன்னாள் நடிகை கருத்து!

Share this News:

புதுடெல்லி (20 பிப் 2022): ஹிஜாப் என்பது முஸ்லீம் பெண்கள் இறைவனுக்கு செய்யும் முக்கியமான கடமை என்று டங்கல் பட நடிகை சாய்ரா வசிம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உருவாகியுள்ள ஹிஜாப் விவகாரம் நாடெங்கும் பேசுபொருளாகியுள்ளது.பல பிரபலங்கள் ஹிஜாப் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நடிகை சாய்ரா வசிம் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹிஜாப் ஒரு தேர்வு மட்டுமல்ல, அது கடவுளுக்கு செய்யும் ஒரு கடமை,” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் முஸ்லீம் பெண்கள் கல்வி அல்லது ஹிஜாப் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முறை நியாயமற்றது. இப்படியெல்லாம் நடப்பது வருத்தமளிக்கிறது. இவ்வாறான செயற்பாடுகள் மோசமானவை என சாய்ரா தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாய்ரா வசிம் 2016 ஆம் ஆண்டு, அமீர் கானுடன் நடித்த ‘டங்கல்’ திரைப்படம் அவரது முதல் படம். 2017 ஆம் ஆண்டில், அவர் அமீர்கானுடன் இணைந்து நடித்த ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ அதுவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் 2019 ஆம் ஆண்டில், ஜைரா திரைப்படத் துறையில் தொடர விரும்பவில்லை என்று அறிவித்தார்.

படத்தில் நடிப்பது அவரது மத நம்பிக்கையை பாதித்தது என்று காரணம் கூறப்பட்டது. மேலும், தனது பழைய படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கிவிட்டு, இதுபோன்ற படங்களை மீண்டும் பகிர வேண்டாம் என்றும் சாய்ரா தனது ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply