இந்திய சுதந்திர இயக்கம் முஸ்லிம்களால் ஆரம்பிக்கப்பட்டது -மவுலானா அர்ஷத் மதனி!

Share this News:

புதுடெல்லி (18 ஆக 2022): நாட்டின் சுதந்திரத்திற்காக அதிக தியாகம் செய்தவர்கள் எப்படி தேச விரோதிகளாக இருக்க முடியும் என்று ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி கூறினார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில் “இந்தியாவின் சுதந்திர இயக்கம் உலமாக்களாலும் முஸ்லிம்களாலும் ஆரம்பிக்கப்பட்டது; மேலும் இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் கிளர்ச்சிக் கொடி உலமாக்களால் உயர்த்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.

.மேலும் “சுதந்திரம் என்ற முழக்கத்தை முதலில் கொடுத்தவர்கள், இன்று துரோகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள். சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் எப்படி துரோகியாக இருக்க முடியும்,” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “இந்து மற்றும் முஸ்லீம் சமூகங்களைச் சேர்ந்த நம் முன்னோர்கள் ஒற்றுமையின் பாதையில் முன்னேறி, ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து நாட்டை விடுவித்தனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரிவினையும் நடந்தது. இந்த பிரிவினை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமல்ல, இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது” என்று மதானி மேலும் கூறினார்.

சீனா விவகாரம் குறித்து பேசிய அவர், “பிரிவினை நடக்காமல் இந்த மூன்று நாடுகளும் (இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்) ஒன்றாக இருந்திருந்தால், இன்று இந்தியாவுக்குள் சீனா ஊடுருவும் நிலை ஏற்பட்டிருக்காது.” என்றார்.


Share this News:

Leave a Reply