இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்ட கொரோனா!

Share this News:

புதுடெல்லி (10 ஏப் 2021): இதுவரை இல்லாத அளவில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் . ஊரடங்கு குறித்து முடிவு செய்ய மாலை மகாராஷ்டிராவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளது .

. நாட்டில் கோவிட் இரண்டாவது அலைக்கு சிகிச்சையளிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்று மட்டும் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சோனியா காந்தி கோவிட் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நிலைமை குறித்து விவாதித்தார். இதற்கிடையே 9.80 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உ.பி. வாரணாசி காஷி விஸ்வநாத் கோயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கும் கோவிட் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. . தடுப்பூசி பற்றாக்குறை பிரச்சினை எழுந்துள்ள நிலையில் , காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்களுடன் சோனியா காந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.

கொரோனா இரண்டாவது அலைக்கு காரணம் மத்திய அரசாங்கத்தின் தோல்வி என்றும், அரசாங்கம் ஆணவத்தை கைவிட்டு நல்ல திட்டங்களை ஏற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply