மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய பழ வியாபாரி பியாரே கான்!

Share this News:

நாக்பூர் (27 ஏப் 2021): நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியாரே கான் ரூ 85 லட்சம் செலவில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரரான பியாரே கான், 400 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜனை நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.

நாடெங்கும் கொரோனா இரண்டாவது அலை அதி வேகத்தில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மத்திய பாஜக அரசின் கையாலாகத தனத்தால் சிக்கித்தவிக்கும் இந்தியாவுக்கு பல்வேறு நாட்டிலிருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. அதேபோல இந்தியாவிலும் உள்ள நல்லுள்ளங்கள் பல உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நாக்பூரை சேர்ந்த தொழிலதிபர் பியாரே கான் ரூ 85 லட்சம் செலவில் இலவசமாக ஆக்சிஜன் வழங்கியுள்ளார்.

புனித ரம்ஜான் மாதத்தில் ஜக்காத் அடிப்படையில் இந்த உதவியை செய்தாரா? என்ற கேள்விக்கு பியாரே கான் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதேவேளை நெருக்கடியான இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவியை செய்துள்ளதாக பியாரே கான் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னணி போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வரும் பியாரே கான், தாஜ்பாக் சேரிகளில் சிறிய மளிகை கடை நடத்தி வந்தவரின் மகனாவார். 1995 ஆம் ஆண்டில் நாக்பூர் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆரஞ்சு பழ விற்பனை செய்ததன் மூலம் தனது தொழிலை தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து ரூ 400 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார். .


Share this News:

Leave a Reply