மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை ஆய்வு செய்ய ஒன்றிய அமைச்சர் கோரிக்கை!

பாட்னா (03 செப் 2022): பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை உத்தரபிரதேசத்தில் உள்ளதைப் போன்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “பீகாரில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில், குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் உள்ள சீமாஞ்சல் பகுதியில் ஆய்வு நடத்த நிதிஷ் குமார் அரசிடம் கோரிக்கை வைத்தோம். இந்த பிராந்தியங்களில் யார் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளை நடத்துகிறார்கள், யார் தங்குகிறார்கள் என்பது பற்றிய தரவு எங்களிடம் இருக்க வேண்டும், ”என்று சிங் கூறினார்.

“யோகி ஆதித்யநாத் அரசு சரியான முடிவை எடுத்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. பீகாரிலும் மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில் தஞ்சம் அடைபவர்களையாவது சரிபார்க்கும் அணுகுமுறை எங்களுக்குத் தேவை,” என்று ஒன்றிய அமைச்சர் மேலும் கூறினார்.

பீகாரின் சீமாஞ்சல் பகுதி பீகாரில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகக் கருதப்படுகிறது, அங்கு 60 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ஏராளமான ரோஹிங்கியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளும் அங்கு தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: