தமிழகம் செய்ததை பின்பற்றிய மேற்கு வங்கத்தினர்!

562

சென்னை (11 ஜன 2020): கோபேக் மோடி தமிழகத்தில்தான் பிரபலம். ஆனால் இபோது மோடி செல்லும் பல மாநிலங்களிலும் பிரபலம்.

பிரதமர் மோடி இருநாள் பயணமாக மேற்கு வங்காளம் மாநில தலைநகரம் கொல்கத்தாவுக்கு இன்று மாலை வருகை தந்தார். அவர் கொல்கத்தா துறைமுகத்தின் 150-வது ஆண்டுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதைப் படிச்சீங்களா?:  போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் - பாஜக எம்பி குற்றச்சாட்டு!

மேலும் கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக்கையும் மேற்கு வங்கத்தினர் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பிரதமர் மோடி வருகைக்கு மேற்கு வங்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். .