மீண்டும் ரிசர்வ் வங்கியில் ரூ 30 ஆயிரம் கோடி பணம் கேட்கும் மத்திய அரசு!

Share this News:

புதுடெல்லி (21 ஜன 2020): மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஏற்கனவே இருமுறை பணம் பெற்றதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக ரூ. 30 ஆயிரம் கோடி பணம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரிசர்வ் வங்கியானது 2018-ஆம் நிதியாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடியும், 2019-ஆம் நிதியாண்டில் ரூ. 28 ஆயிரம் கோடியும் ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியிருந்தது.

இந்நிலையில் 2019-20 ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து மொத்தமாக ரூ. 90 ஆயிரம் கோடியை பங்கு ஈவுத்தொகையாக பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதில் முதல் கட்டமாக ரூ. 30 ஆயிரம் கோடி இடைக்கால ஈவுத்தொகை கேட்க மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply