கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணம் – உறுதி செய்தது அரசு!

472

புதுடெல்லி (15 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை எடுத்த ஒருவர் உயிரிழந்ததை அரசு உறுதி செய்துள்ளது.

இதனை தடுப்பூசி பக்க விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்த குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி  கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்த 68 வயதான ஒருவர் அனாபிலாக்ஸிஸ் காரணமாக இறந்தார் என்று இதுகுறித்த அறிக்கை காட்டுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!

“நாங்கள் கண்ட முதல் மரணம் இதுதான், விசாரணையின் பின்னர் இறந்ததற்கான காரணம் தடுப்பூசிக்குப் பிறகு அனாபிலாக்ஸிஸ் என்று கண்டறியப்பட்டது,” என்று AEFI இன் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியால் மரணம் எதுவும் நிகழவில்லை என்று கூறி வந்த நிலையில் அரசின் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: India Today