ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு!

345

புதுடெல்லி (12 டிச 2020): இந்தியாவிலிருந்து 2021 ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்ப தேதி ஜனவரி 10, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை வெளிநாட்டினருக்கு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள கோவிட் நெறி முறைகளுக்கு உட்பட்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  தேச துரோக வழக்கில் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

அதன் அடிப்படையில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணபிக்க ஜனவரி 10 2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.