சட்ட அமைச்சரின் வெற்றி செல்லாது – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

அகமதாபாத் (12 மே 2020): குஜராத் மாநில சட்த்துறை அமைச்சர் புபேந்திரசிங் சூடஸ்மாவின் தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்கா தொகுதியில் புபேந்திரசிங் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷ்வின் ரத்தோட்டைவிட 327 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைப் படிச்சீங்களா?:  பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை - தலைமை தேர்தல் ஆணையம்!

வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரியாக இருந்த தோல்கா துணை ஆட்சியர் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி செய்ததாகவும் 429 அஞ்சல் வாக்குகளை எண்ணவில்லை என்றும் எனவே பாஜக வேட்பாளரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி காங்கிரஸ் வேட்பாளர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.