ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

Share this News:

பெங்களூரு (28 மார்ச் 2022): கர்நாடகாவில் ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு மத்தியில் எஸ்எஸ்எல்சி (10-ஆம் வகுப்பு) தேர்வு இன்று தொடங்கி அமைதியாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் சீருடையில் பரீட்சைகளை எழுதினர். சிலர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்ததால் அவர்கள் பள்ளியை விட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் கே.எஸ்.டி.வி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு நடத்தும் போது ஹிஜாபை கழற்ற மறுத்த தேர்வு கண்காணிப்பாளரை கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. தேர்வு பணியில் இருந்த நூர் பாத்திமா என்ற கண்காணிப்பாளர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். அவரிடம் ஹிஜாபை அகற்றுமாறு கேட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார், பின்னர் தேர்வு மையத்திலிருந்து அவர் திருப்பி அனுப்பப்பட்டார். மேலும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Share this News:

Leave a Reply