ஹிஜாப் விவகாரம் – தேர்வு எழுத முடியாத நிலையில் கர்நாடக முஸ்லிம் மாணவிகள்!

Share this News:

பெங்களூரு (24 பிப் 2022): ஹிஜாப் தடை விவகாரத்தால் கர்நாடக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத தயாராக இல்லை என தெரிவித்துள்ளனர்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, மாணவர்கள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே எஸ்எஸ்எல்சி (10ஆம் வகுப்பு) மற்றும் (12ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன.

மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை எடுக்க மறுத்து வருகின்றனர்.

மாநிலம் முழுவதும் உள்ள பியு கல்லூரிகளில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 1.25 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் சுமார் 84,000 பேர் மாணவிகள்.

இதில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத வலியுறுத்தி தேர்வை புறக்கணித்துள்ளனர்.

ஹிஜாபை வலியுறுத்தும் சிறுமிகளின் எண்ணிக்கை 1,000ஐ நெருங்குகிறது, தேர்வுகள் நெருங்கி வருவதால், அவர்களின் வருகை எண்ணிக்கையும் குறைந்து வருவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஹிஜாப் தடை விவகாரம் தொடர்ந்தால் முஸ்லிம் மாணவிகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக கல்வி வல்லுநர்கள் கருதுகின்றனர்.


Share this News:

Leave a Reply