வன்முறையாக மாறிய ஹிஜாப் தடை விவகாரம் – கல் வீச்சு, காவல்துறை தடியடி!

Share this News:

பெங்களூரு (08 பிப் 2022): கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தடை விவகாரம் வன்முறையாக மாறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கல்லூரி வரும் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப் பட்டதை அடுத்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடெங்கும் எதிர்ப்பு வலுத்துள்ளது.

இந்நிலையில் செவ்வாயன்று கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள ரபகவிபனஹட்டியில் உள்ள அரசுப் பல்கலைக் கழக கல்லூரியில் இரு பிரிவினர் ஒருவர் மீது ஒருவர் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை வன்முறையாக மாறியதையடுத்து கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது. கல் வீச்சில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஜாப் அணிந்த மாணவர்களுக்கும், காவி சால்வை அணிந்து வந்த மற்றொரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கல் வீச்சு தொடங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல் வீச்சில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். போலீஸ் சூப்பிரண்டு லட்சுமிபிரசாத் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கல்லூரி பகுதியில் பதற்றம் நிலவியதால், கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்தது.

இதற்கிடையே ஹிஜாப் அணிந்து கல்லுரி வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் அளிக்கப் பட்டுள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply