இந்து அல்லாத இளைஞர்களிடம் வேண்டாம் – இந்து பெண்களுக்கு இந்து மகாசபை எச்சரிக்கை!

Share this News:

புதுடெல்லி (13 அக் 2022) இந்து அல்லாத இளைஞர்கள்களிடம் இந்து பெண்கள் மெஹந்தி இட்டுகொள்ளக் கூடாது என்று இந்து மகா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வியாழன் இரவு நடைபெறும் கர்வா சௌத் பூஜைக்கு முன் இந்து பெண்கள் தங்கள் கைகளில் மெஹந்தியைப் பூசிக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் இந்து பெண்கள் முஸ்லீம் இளைஞர்களிடம் மெஹந்தி இட்டுக்கொள்ள கூடாது என இந்து மகா சபை எச்சரித்துள்ளது. கட்டௌலியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி, மெஹந்தி கடைகளைத் திறந்த முஸ்லீம் இளைஞர்கள் லவ் ஜிஹாத் சிந்தனையுடன் உள்ளனர். “இந்த மெஹந்தி வேலை என்ற போர்வையில் லவ் ஜிஹாத் நடத்துகிறார்கள். எனவே இந்து அல்லாதவர்களிடம் மெஹந்தி இட்டுக்கொள்ள வேண்டாம். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) 13 மெஹந்தி ஸ்டால்களைத் திறந்துள்ளது என்று தெரிவித்துள்ள இந்து மகாசபை உறுப்பினர் லோகேஷ் சைனி, “லவ் ஜிஹாத்” இரையிலிருந்து பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


Share this News:

Leave a Reply