கிறிஸ்தவ தேவாலயங்களில் நுழைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்த இந்துத்துவாவினர்!

Share this News:

குருகிராம் (25 டிச 2021): ஹரியானாவின் பட்டோடியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் நுழைந்த இந்து வலதுசாரி குழுக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை சீர்குலைத்தன.

இந்து வலதுசாரி சக்திகள் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து, அமைதியான பிரார்த்தனைகள் மற்றும் பண்டிகைகளை சீர்குலைத்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ஹரியானாவின் பட்டோடியில் உள்ள தேவாலய வளாகத்திற்குள் நுழைந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைத்தனர். மேலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘பாரத் மாதா கி ஜெய்’ கோசங்களை எழுப்பிய இந்துத்துவா குண்டர்கள், பாடகர்களை மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்டு மைக்கைப் பிடுங்கியுள்ளனர். இதன் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

உள்ளூர் மத போதகர் ஒருவர் பிடிஐயிடம், ‘தேவாலயத்தில் பெண்களும் குழந்தைகளும் இருந்ததால் பயமாக இருந்தது. நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வருகிறது. இது நமது பிரார்த்தனை மற்றும் மத உரிமையை மீறுவதாகும்’ என்றார்

இது குறித்து பட்டோடி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி அமித் குமார் கூறுகையில், காவல்துறைக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றார்.

ஹரியானாவில் தொடர்ந்து பல வாரங்களாக முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிறிஸ்தவர்கள் மீதும் இந்துத்வாவினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply