கோழி பொரியல் செய்ய மறுத்தற்காக மனைவியை கொலை செய்த கணவன்!

1125

பெங்களூரு (24 ஆக 2021): கர்நாடகாவில் கோழி பொரியல் செய்ய மறுத்தற்காக கணவனே மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 வயதான முபாரக் பாஷா என்பவரின் மனைவி ஷிரின் பானு. வீட்டில் மகளை காணவில்லை என்பதை அறிந்து பெற்றோர் தங்கள் மகளைக் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.

இதனை அடுத்து முபாரக் பாஷாவைப் பிடித்து போலீசார் விசாரித்த வகையில் பாஷா போலீசாரிடம், “ஆகஸ்ட் 18 அன்று ஷிரினிடம் கோழி பொரியல் சமைக்கச் சொன்னேன்.

நான் அன்று இரவு வீட்டுக்கு வந்தபோது, கோழி பொரியல் இல்லாததைப் பார்த்து ஏமாற்றமடைந்தேன். நான் என் மனைவியிடம் கேட்டபோது, அவள் திமிராக பதிலளித்தாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான் ஒரு மரக் கட்டையைப் பயன்படுத்தி அவளுடைய தலையில் அடித்தேன், இதில் ஷரின் துடி துடித்து இறந்தாள் அப்போது குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

உடலை ஒரு பெரிய பையில் போர்த்தி, நான் அதை நள்ளிரவில் என் பைக்கில் எடுத்துச் சென்று சிக்கபனவர ஏரியில் அப்புறப்படுத்தினேன்.” என்றார்.

குற்றத்தை முபாரக் பாஷா ஒப்புக் கொண்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.