தப்பியோடிய ஐஏஎஸ் அதிகாரி மீது கேரள அரசு அதிரடி நடவடிக்கை!

திருவனந்தபுரம் (28 மார்ச் 2020): கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த கேரள ஐஏஎஸ் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர் அனுபம் மிஷ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக விடுமுறையில் சென்ற அவர், பின்னர் மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு முன்னர் கேரளாவுக்கு வந்தார்.

மீண்டும் பணியில் சேர்ந்த அவரை, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வீட்டிலேயே 14 நாட்களுக்கு தனிமையில் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அவர், அதிகாரிகளிடம் கூறாமல் வீட்டிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தன் சகோதரர் வீட்டுக்குச் சென்றார்.

இதனை அடுத்து அனுபம் மிஷ்ராவை பணியிடை நீக்கம் செய்த கேரள அரசு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி கொல்லம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: