பாஜகவை விட்டு விலகும் முக்கிய தலைவர்கள்!

Share this News:

அமிர்தசரஸ் (07 பிப் 2020): பஞ்சாபில் உள்ளாட்சி மன்றத் தேர்தளுக்கு ஏழு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பாஜக முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

கடந்த மாதம் மட்டும் கட்சியின் முக்கிய தலைவரான மல்விந்தர் சிங் காங் உட்பட 20 பாஜக தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறினர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பயந்து பாஜக பல இடங்களில் பிரச்சாரம் செய்யக்கூட முடியவில்லை. பஞ்சாபில் எட்டு மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சி மன்றங்கள் / நகர்ப்புற பஞ்சாயத்துகளில் மொத்தம் 2302 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளன.

என்டிஏவின் பழமையான நட்பு நண்பனான அகாலிதளம் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிலிருந்து விலகியது. 2015 ல் பாஜகவுடன் இருந்த அகாலிதளம் தற்போது இல்லாதது பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது

ஹரியானாவிலும் பாஜக எதிர்ப்பலை அதிகரித்துள்ளது. விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக ஏற்பாடு செய்த பேரணி முயற்சியும் தோல்வியடைந்தது. ஜனவரி 10 ம் தேதி, முதல்வர் மனோகர் லால் கட்டாரின் ஹெலிகாப்டரை தரையிறக்க விவசாயிகள் அனுமதிக்கவில்லை. 1,500 போலீசார் நிறுத்தப்பட்ட போதிலும், விவசாயிகளின் முற்றுகையால் ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.

பாஜக மட்டுமல்ல, அதன் நண்பனான ஜேவிபியும் இதேபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இரு கட்சிகளையும் இனி ஏற்கப்போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.


Share this News:

Leave a Reply