இந்திய சீன எல்லையில் 1 லட்சம் வீரர்கள் குவிப்பு!

402
புதுடெல்லி (13 அக் 2020): இந்திய சீன எல்லையில் 1 லட்சம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
எல்லையில் பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. பாங்கோங் த்சோ ஏரியின் கரையிலிருந்தும், லடாக்கில் உள்ள பிற மோதல் பகுதிகளில் இருந்தும்  சீன படைகள் திரும்ப பெற வலியுறத்தபட்டது.
உயர்மட்ட இந்திய மற்றும் சீன இராணுவ பிரதிநிதிகளின்  இந்த சந்திப்பு 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. கிழக்கு லடாக்கில் எல்.ஐ.சியின் இந்தியப் பக்கத்தில் உள்ள சுஷூலில் பிரதிநிதிகள் இருவரும் சந்தித்தனர். இதற்கிடையில், லடாக் நிலைப்பாட்டிற்கு முன்கூட்டியே தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் மங்கலாகத் தோன்றியதால், சுமார் 1,00,000 லட்சம் இந்திய மற்றும் சீனவீரர்கள் இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரெச்சின் லா, ரெசாங் லா, முக்பாரி, மற்றும் டேப்லெட் போன்ற முக்கியமான மலை உயரங்களிலும், பாங்காங் ஏரியின் தென் கரையிலும் இந்தியா தனது நிலைகளை உயர்த்தியுள்ளது. பிளாக்டாப்பிற்கு அருகிலும் கணிசமான எண்ணிக்கையிலான துருப்புக்களை இந்தியா படைகள் நிறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதைப் படிச்சீங்களா?:  மோடிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் கைது!