தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு!

1264

புதுடெல்லி (28 ஆக 2021): இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, சனிக்கிழமை 46,759 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன, கொரோனா வழக்கு தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக 40,000-ஐ தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 32,801 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 4,654 வழக்குகளும், தமிழ்நாடு 1,542 வழக்குகளும், ஆந்திரப் பிரதேசம் 1,512 வழக்குகளும், கர்நாடகா 1,301 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 509 பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன (179), மகாராஷ்டிராவில் 170 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 31,374 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இந்தியாவில் கொரோனாவால் மீண்டவர்கள் விகிதம் 97.56 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதும் மொத்தமாக 3,18,52,802 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,03,35,290 தடுப்பூசி அளவுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது மொத்த அளவுகளை 62,29,89,134 ஆக அதிகரித்துள்ளது.