ஊரடங்கு காலத்தில் சிஏஏ எதிர்ப்பாளர்களை கைது செய்வதா? – எதிர் கட்சிகள் கடும் கண்டனம்!

புதுடெல்லி (02 ஜுன் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய மாணவர்களை கைது செய்வதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கொரோனா பவலாலும், ஊரடங்காலும் நாடே பெரும் சோதனை காலத்தில் உள்ளது. இந்நிலையில் அவசியமில்லாமல் சிஏஏ எதிர்ப்பு மாணவர்களை டெல்லி போலீஸ் கைது செய்து வருகிறது.

இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக உலகம் இப்போது உள்ள சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை கூட்டாக கண்டிக்க வேண்டும் என்று டி.ராஜா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான மஜீத் மேமன், “டெல்லியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அமைதிவழியில் போராடிய மாணவர்கள் மீது மட்டும் அரசின் நடவடிக்கை ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பிரபல ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைர் கைது!

ஆர்.ஜே.டி பாராளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா கூறுகையில்”இது குறித்து அனைத்து சமூக ஆர்வலர்களுக்கும் தகவல் அனுப்பப்படும், மாணவர்களின் வாழ்க்கையை வீணடிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைத்து எதிர் கட்சிகளும் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு அரசின் நடவடிக்கையை கடுமையாக் எதிர்க்க வேண்டும்” என்றார்.