2020 புனித ஹஜ் பயணம் பற்றிய இந்திய ஹஜ் கமிட்டி முக்கிய அறிவிப்பு

Share this News:

புதுடெல்லி (06 ஜூன் 2020): கொரோனா நோய் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயண ஏற்பாடுகளை விருப்பமானவர்கள் ரத்து செய்து கொள்ள இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது

இவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில் சௌதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரையை ரத்து செய்து கொள்ள வழிகாட்டப்பட்டுள்ளது

ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள் செலுத்திய முழு தொகையையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஹஜ் கமிட்டி முகவரிக்கு அனுப்பி வைத்த பின்னர் அவர்களுக்கான தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என ஹஜ் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த PDF fill, களை http://hajcommittee.gov.in/ and hajjtn.com என்ற இனைய தலத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Share this News: