முஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல்!

Share this News:

புதுடெல்லி (12 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இ.யூ.முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா தற்போது சட்ட வடிவம் பெற்றுள்ள நிலையில் இந்த மசோதாவை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்சியைச் சேர்ந்த பி.கே. குன்ஹாலிகுட்டி, முகமது பஷீர், அப்துல் வஹாப், கே.எஸ். நவாஸ் கனி ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர். இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருப்பதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராவார் என்று தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் ஆஜராக அவரை சந்தித்து சம்மதம் பெற்று இருப்பதாக ஐயுஎம்எல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால் மட்டுமே இச்சட்டம் நிறைவேறியதாக அர்த்தம் இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் உச்ச நீதிமன்ற முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இதற்கிடையே இச்சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் வலுத்துள்ள போராட்டத்தால் அங்கு இணைய சேவை விமான போக்குவரத்து முற்றிலும் முடக்கப் பட்டுள்ளது


Share this News:

Leave a Reply