இந்தியர்களைத் திரும்ப அனுப்பியது சீனா!

Share this News:

புதுடெல்லி (01 ஜூலை 2020): இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவில் இருந்து கடந்த 21-ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், இந்தியர்களை அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு பயணிகள் இன்றி காலியாக சென்றது. இதில் பயணிக்க இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்பட பலரின் பயணமும் தடைபட்டது.

குவாங்சோவிற்கு சென்ற அந்த காலி விமானத்தில் அங்கிருந்த 86 இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்தியாவில் இருந்து கடந்த 21-ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், இந்தியர்களை அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.


Share this News: