மாலைகளுக்கு பதிலாக சாதியை ஒழிக்கலாம் – மோடி மீது ஜிக்னேஷ் மேவானி விமர்சனம்!

Share this News:

புதுடெல்லி (07 டிச 2020): மாலைகளுக்கு பதிலாக சாதியை ஒழிப்பதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு உழைப்பதே அம்பேத்கருக்கு உண்மையான அஞ்சலி என்று தலித் தலைவரும் குஜராத் எம்.எல்.ஏ.விமான ஜிக்னேஷ் மேவானி  பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அம்பேத்கரை நினைவுகூரும் வகையில் அம்பேத்காரின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் நரேந்திர மோடி ட்வீட்டில் அம்பேத்கர் சிலைக்கு குனிந்து குனிந்து நிற்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனை விமர்சித்துள்ள ஜிக்னேஷின் ‘வெறும் மாலை அணிவதற்குப் பதிலாக, இன்று முதல் முழு நாடும் ஒரு உண்மையான புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக சாதி நிர்மூலமாக்கும் பாதையில் முன்னேற வேண்டும். அதுதான் பாபா சாஹிப்பிற்கு மிகவும் சரியான அஞ்சலி. நாங்கள் இந்தியர்கள், நாங்கள் மனிதர்கள், எங்களுக்கு சாதி முகவரிகள் தேவையில்லை, எல்லோரும் இந்த உணர்தலுக்கு வரட்டும். ஜெய் பீம், ஜெய் பாரத், ‘என்று ஜிக்னேஷ் மேவானி ட்வீட் செய்துள்ளார்.

அம்பேத்கரின் கருத்துக்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். நாட்டிற்கு ஒரு விரிவான அரசியலமைப்பைக் கொடுத்து முன்னேற்றம், செழிப்பு மற்றும் சமத்துவத்திற்கு வழி வகுத்ததற்காக அம்பேத்கரைப் பாராட்டியதாக அமித் ஷா ட்வீட் செய்துள்ளார்.


Share this News:

Leave a Reply