இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் கோவிட் தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி!

276

புதுடெல்லி (09 ஏப் 2021): இந்தியாவில் ஜான்சன் & ஜான்சன் உருவாக்கிய கோவிட் தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் இரண்டாவது கோவிட் அலை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையிலும் கோவிட் தடுப்பூசி பற்றாக்குறை என்கிற தகவலும் பரவி வரும் நிலையில் ,ஜான்சன் & ஜான்சன் மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்லது.

பிரதமர்கள் முதல்வர்களுடனான கூட்டத்தின்போது,​​பல மாநிலங்கள் தடுப்பூசிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தன.

இதைப் படிச்சீங்களா?:  மகாராஷ்டிராவில் சிவசேனா போராட்டம் நடத்த திட்டம்!

ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சோதனை விரைவில் தொடங்கப்படும் என்று ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

. தற்போது நாட்டில் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகள் தலா இரண்டு டோஸ்கள் கொடுக்கப்பட வேண்டும் . ஆனால் ஜான்சன் & ஜான்சன் தனித்துவமானது, இது ஒரு டோஸ் பெற்றுக்கொண்டால் போதுமானது.