பத்திரிகையாளர் சித்திக் கப்பன் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவது எப்போது?

Share this News:

லக்னோ (09 செப் 2022): பத்திரிகையாளர் சித்திக் கப்பன் அடுத்த வாரம் லக்னோ சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று ஒரு அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்,

“சித்திக் கப்பன் கடந்த சில மாதங்களாக லக்னோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் உத்தரவு இங்கு சமர்ப்பிக்கப்பட்டதும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார், ”என்று டிஜிபி (சிறை) அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) சந்தோஷ் குமார் வர்மா கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டு உத்திர பிரதேசம் ஹத்ராஸில் தலித் பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் சித்திக் கப்பன் அக்டோபர் 2020 இல் உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸுக்கு செய்தி சேகரிக்க சென்றபொது போது கைது செய்யப்பட்டார்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்ததற்காகவும், வன்முறையைத் தூண்டும் “சதியில்” ஒரு பகுதியாக இருந்ததற்காகவும் மதுரா காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் லக்னோ சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இரண்டு வருடம் சிறையில் வாடும் கப்பனை உச்ச நீதிமன்றம் வெள்ளியன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கியது.

ஜாமீனுக்கு பல நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்தது, விடுதலைக்குப் பிறகு அடுத்த ஆறு வாரங்களுக்கு அவர் டெல்லியில் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை டெல்லியில் உள்ள நிஜாமுதீன் காவல் நிலையத்தில் கப்பன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. .


Share this News:

Leave a Reply