பாடபுத்தகத்தில் திப்பு சுல்தான் குறித்த அத்தியாயத்தை நீக்க கர்நாடக அரசு முடிவு!

Share this News:

பெங்களூரு (27 மார்ச் 2022): கர்நாடக அரசு பள்ளி பாடப்புத்தகங்களைத் திருத்தவும், திப்பு சுல்தான் உட்பட சில அத்தியாயங்களை நீக்கவும் திட்டமிட்டுள்ளது. மறுஆய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் இதற்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கல்வித்துறை அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால் வரும் கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.

திப்பு சுல்தான் பற்றிய அத்தியாயங்களை முற்றிலுமாக நீக்க அந்த குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கிடையில், பள்ளி பாடநூல் மறுஆய்வுக் குழு சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையை கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் உறுதிப்படுத்தினார். ஆனால் குழுவின் பரிந்துரை தொடர்பான எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுக்குறித்து அமைச்சர் நாகேஷ் தெரிவிக்கையில் “ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையிலான பள்ளி பாடநூல் ஆய்வுக் குழுவின் அறிக்கையை நான் பெற்றுள்ளேன். அந்த அறிக்கையில் உள்ள பரிந்துரையை அடுத்த கல்வியாண்டு முதல் அமுல்படுத்துவோம். அதற்கு முன் விவாதித்த பின் விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி அறிக்கை குறித்த விவரங்களை வெளியிடுவேன்” என்றார்.


Share this News:

Leave a Reply