காஷ்மீரில் பண்டிட்டுகளைவிட அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் – சஜாத் லோன்!

366

புதுடெல்லி (23 மார்ச் 2022): 1990களில் பண்டிட்களை விட காஷ்மீரி முஸ்லிம்கள் 50 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். என்று ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டின் தலைவர் சஜாத் லோன் கூறியுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள லோன், படம் ஒரு கற்பனைப் படைப்பு. என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,”காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியில் எந்த சந்தேகமும் இல்லை. காஷ்மீரி முஸ்லிம்கள் பண்டிட்களை விட 50 மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டாக்களால் என் தந்தையை இழந்தேன். 1990களில் காஷ்மீரி முஸ்லிம்களும், பண்டிட்டுகளைப் போல ஆதரவற்றவர்களாக இருந்தனர்.” என்று கூறினார்.

இதைப் படிச்சீங்களா?:  சிறுபான்மையினர் நலத்துறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

மேலும், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் முக்கிய நோக்கம் பண்டிதர்களின் வலியைக் காட்டுவது அல்ல. மாறாக பல்வேறு சமூகங்களுக்கிடையில் வெறுப்பு விதைகளை விதைப்பதாகும். பண்டிதர்கள் இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள். அதைப்பற்றி இயக்குனர் யோசித்தாரா? அவர்கள் நமது சகோதரர்கள். நாங்கள் அவர்களை நேசிக்கிறோம்.” என்றார்.