ஹிஜாப் விவகாரம் – பேராசிரியர் பணியை விட்டு விலகிய கல்லூரி விரிவுரையாளர்!

Share this News:

பெங்களூரு (18 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாபை கைவிடச்சொன்னதால் மறுத்து பேராசிரியர் பணியை கைவிட்டுள்ளார் பெண் விரிவுரையாளர் ஒருவர்.

கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆசிரியர் பணியின் போது ஹிஜாபைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் பேராசிரியையாக பணிபுரியும் ஆங்கில விரிவுரையாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “இது என் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். ஹிஜாப் இல்லாமல் என்னால் கற்பிக்க முடியாது, ”என்று அவர் கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு கூறினார்.

“மூன்று வருடங்களாக ஜெயின் பியு கல்லூரியில் கெஸ்ட் லெக்சரராகப் பணிபுரிகிறேன். இந்த மூன்று வருடங்களில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நான் சாதாரணமாக வேலை செய்தேன். ஆனால், நேற்று எனது முதல்வர் என்னை அழைத்து ஹிஜாப் அல்லது மத அடையாளங்கள் இல்லாமல் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். கடந்த மூன்று ஆண்டுகளாக, நான் ஹிஜாப் அணிந்து விரிவுரை செய்கிறேன், அது என் சுயமரியாதையை புண்படுத்தியது,

எனவே அந்த கல்லூரியில் நான் பணியாற்ற விரும்பவில்லை. அதனால், தானாக முன்வந்து ராஜினாமா செய்தேன்,” என்றார்.

மேலும்”மதத்திற்கான உரிமை என்பது அரசியலமைப்பு உரிமையாகும், அதை யாரும் மறுக்க முடியாது.” உங்கள் ஜனநாயக விரோத செயலை நான் கண்டிக்கிறேன் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கும் கல்லூரி நிர்வாகங்களின் முடிவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது, தீர்ப்புக்குப் பிறகு, ஹிஜாப் அணிவது தொடர்பான குறிப்பிட்ட விதியை வெளியிடும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply