லவ் ஜிஹாதுக்கு ஜாமீனில் வெளி வராத வகையில் 5 வருடம் சிறை: புதிய சட்டம்!

Share this News:

போபால் (17 நவ 2020): பாஜக ஆளும் கர்நாடகா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லவ் ஜிஹாதுக்கு எதிராக விரைவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஆலோசித்து வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் லவ் ஜிஹாதுக்கு எதிரான சட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

‘லவ் ஜிஹாதுக்கு எதிராக அடுத்த சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு மசோதா கொண்டு வரப்படலாம் என்று மிஸ்ரா கூறினார். மேலும் இதற்கு தண்டனையாக “கடுமையான சிறைவாசம் இருக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும் மிஸ்ரா கூறினார். ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும். என்று மிஸ்ரா தெரிவித்தார்.

மேலும் தன்னார்வ மதமாற்றம் செய்து கொள்ளும் பட்சத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் லவ் ஜிகாதிற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டுவருவது குறித்து சூசகமாக கூறி இருந்தார். “

லவ் ஜிஹாத் ’என்பது இந்து வலதுசாரி அமைப்புகளால் உருவாக்கப் பட்ட ஒரு வார்த்தையாகும்.


Share this News:

Leave a Reply