அமைச்சரை தாக்கியது கொரோனா வைரஸ்!

மும்பை (24 ஏப் 2020): மஹாராஷ்டிரா மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சர் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ஊரடங்கு காலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது குறித்து கடந்த வாரம் அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத், காவல்துறை மூத்த உயரதிகாரியுடன் ஆலோசனை நடத்திய நிலையில், அந்த காவல் உயரதிகாரிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சருக்கு முதல்முறை நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. 2-வது முறை சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வெளியாகியுள்ளது.

இதையடுத்து தானேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்:

குவைத்தில் கூகுள் பே சேவை!

குவைத் (25 ஜன 2023) குவைத்தில் கூகுள் பே சேவை தொடங்கப்படவுள்ளது. குவைத் மத்திய வங்கியின் தேவையான ஆய்வுகள் முடிந்த பிறகு நாட்டில் கூகுள் பே சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். நாட்டின்...

குவைத்தில் நீடிக்கும் கடும் குளிர்!

குவைத் (25 ஜன 2023): குவைத்தில் கடும் குளிர் நீடிக்கிறது. பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. குவைத் முழுவதும் கடும் குளிர் நிலவத் தொடங்கியது. இரவுகளில், பாலைவனப் பகுதிகளில் காற்றின்...

முஸ்லிம் தோற்றத்தில் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்!

மஸ்கட் (28 ஜன 2023): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் ஓமன் மசூதிக்குச் சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு...