உத்திர பிரதேச தேர்தலில் சமாஜ்வாதியுடன் கரம் கோர்க்கும் மம்தா!

328
Mamta-Banerjee
Mamta-Banerjee

லக்னோ (19 ஜன 2022): மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் சமஜ்வாதிக்கு ஆதரவாக ஈடுபடவுள்ளார்.

அகிலேஷ் யாவுடன் கரம் கோர்க்கும் மம்தா பானர்ஜி, லக்னோவில் அகிலேஷ் யாதவின் தேர்தல் பேரணியில் கலந்து கொள்கிறார். தனது கட்சி பிரச்சாரத்திற்கு மம்தாவை எஸ்பி துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா நேரில் அழைத்திருந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் பேரணியின்போது மம்தா பானர்ஜி ஆன்லைனில் பேசுவார். அதேபோல, வாரணாசியில் நடைபெறும் பேரணியில் அகிலேஷுடன் மம்தாவும் கலந்து கொள்கிறார்.

பாஜகவுக்கு எதிராக மம்தா பானர்ஜியின் போராட்டம் நாடு முழுவதும் பார்க்கப்பட்டது. முன்னதாக உ.பி. சட்டசபை தேர்தலில் மம்தா பிரச்சாரம் செய்ய வேண்டும் என எஸ்.பி. கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.