அடுத்த மூன்று நாட்களில் அது நடக்கும் – மம்தா பானர்ஜி அதிரடி!

Share this News:

கொல்கத்தா (21 ஜன 2020): “மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்!” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) நிறைவேற்றியதிலிருந்து அதற்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சி.ஏ.ஏ அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதாகத் தெரிவித்ததோடு மத்திய அரசு அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

கேரளாவை தொடர்ந்து பஞ்சாபிலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ராஜஸ்தானிலும் விரைவில் நிறைவேற்றப் படவுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று நாட்களில் இது நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply